மனைவியின் மீது பொறாமை ஏற்பட்டதால் கணவன் செய்த கொடூர செயல்!!

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவில் குல்தீப் ராகவ் என்ற நபருக்கும் ரிச்சா சிசோடியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ரிச்சா தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் கடந்த 2011-ல் பி.டெக் படிப்பை முடித்த ராகவுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் தனது தந்தை மளிகை கடையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மனைவி மட்டும் நல்ல வேலையில் இருக்கிறாரே என அவர் மீது ராகவுக்கு பொறாமை ஏற்பட்டு அது அவருக்குள் தாழ்வு மனபான்மையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரிச்சாவுடன் ராகவ் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே சில தினங்களுக்கு முன்னர் சண்டை முற்றிய நிலையில் கூரான பொருளை கொண்டு ரிச்சாவை ராகவ் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரிச்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரிச்சா உடலில் அதிக காயம் உள்ளதால் ராகவ் குடும்பத்தினரில் குறைந்தபட்சம் மூன்று பேராவது சேர்ந்து அவரை தாக்கியிருக்கலாம் என ரிச்சாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் ராகவ்வை கைது செய்துள்ளனர். விசாரணையில் ரிச்சாவுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராகவின் தந்தையையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

kp