மனைவியின் கள்ளத் தொடர்பை கண்ணால் கண்ட கணவன் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பல்­லம பொலிஸ் பிரி­விற்குட்­பட்ட வில்­பத்து பகு­தியில் தனது மனைவி இரா­ணுவ வீரர் ஒரு­வ­ருடன் கள்ளத் தொடர்பை வைத்­தி­ருந்­த­தாகத் தெரி­வித்து மனை­வி­யையும் அவ­ரது தாய், சகோ­தரி மற்றும் மனை­வி­யுடன் தொடர்பை வைத்­தி­ருந்த இரா­ணுவ வீரர் ஆகி­யோரை கத்­தியால் குத்­திய நபர் ஒரு­வரை பல்­லம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

தனது மனைவி, கள்ளக் காத­ல­னான குறித்த இரா­ணுவ வீரரை சந்­திப்­பது மனை­வியின் தாயாரின் வீட்டில் என்­பதை அறிந்­தி­ருந்த சந்­தே­க­நபர், நேற்றுமுன்தினம் மாலை மனைவி தனது தாயாரின் வீட்­டிற்கு சென்­ற­போது, அவரைப் பின்­தொ­டர்ந்து சென்­றுள்ளார்.

இரவு வேளையில் மனை­வியின் கள்ளக் காதலன் அந்த வீட்­டிற்கு மோட்டார் சைக்­கிளில் வந்­துள்ளார். இதன்­போது தனது மனை­வியும் குறித்த நபரும் அந்த வீட்டில் இருப்­பதை தெரிந்­து­கொண்ட சந்­தே­க­நபர் முதலில் மோட்டார் சைக்­கி­ளுக்கு தீ வைத்து கொளுத்­தி­விட்டு, வீட்­டிற்குள் சென்று நால்­வ­ரையும் கத்­தியால் குத்தி காயப்­ப­டுத்­தியுள்ளார்.