மத்திய மாகாண பட்டதாரிகளின் உடனடி கவனத்திற்கு!

http://onlinerx365.com/levitra_soft_generic.html|Purchase Online Levitra Soft January 11, 2017 இலங்கை செய்திகள் Leave a comment 1,305 Views

தற்போது மத்திய மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன.  இதற்கமைய விண்ணப்பங்கள் கோரபட்டுள்ளன.

இதில் தமிழ்மொழி மூலமாண விண்ணப்பதாரிகளுக்கு விண்ணபத்தில் கேட்கபட்டிருக்கும் பாடசாலை தெரிவு ஒரு பிரச்சனையை தோற்றுவித்துள்ளது.

காரணம் தமிழ்மொழி விண்ணப்பதாரர்களுக்கு பாடசாலைகள் வழங்கபடவில்லை. சிங்களமொழிக்கு வழங்கபட்டுள்ளது. இந் நிலையில் விண்ணப்பதாரிகள் இதற்கு என்ன செய்வது என்று தத்தளித்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம், மலையக ஆசிரியர் முன்னனியின் தலைவர் எஸ். ரவிந்திரன் அகிய இருவரும் இன்று (11) மத்திய மகாண கல்வி அமைச்சின் செயலாளர் விஜேரத்ன, பல்லேகல மாகாண சபை கட்டத்தில் அமைந்திருக்கும் காரியாலயத்தில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டபட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராமிடம் வினவிய போது,
நாங்கள் இன்று (11) மத்திய மகாண கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து மலையக பட்டதாரிகள் விண்ணபிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறி;த்து முன் வைத்தோம். அதற்கு தீர்வாக விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்தில் பாடசாலை தெரிவு என்ற கட்டத்தில் பாடசாலை போட தேவையில்லை.

விண்ணப்பதாரிகள் “திறந்த விண்ணப்பமாக” விண்ணபிக்கலாம். பாடசாலைகள் பின்னர் வெற்றிடத்திற்கு ஏற்ப நிரப்பபடும். வெளி நாடுகளிலும் உள்நாட்டில் இருந்துக் கொண்டு வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படித்த பட்டதாரிகள், இலங்கை பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கபட்ட கடித்தினையும் சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.