மதியம் தூங்குபவர்களா நீங்கள்? அப்போ இந்த நோய்க்கான அபாயம் உண்டு!

http://onlinerx365.com/sildamax-generic.html|buy Sildamax pills January 9, 2017 ஆணழகன், ஆரோக்கியம், அழகு, ஃபேஷன் Leave a comment 349 Views

http://onlinerx365.com/cipro_generic.html|http://onlinerx365.com/cipro_generic.html

உடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் 40 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தினமும் தூங்கினால் சர்க்கரை வியாதிக்கான ஆபத்து ஏற்படும் .

ஆராய்ச்சி :
தினமும் குறைந்தது 45- 1 மணி நேரம் தூங்கினால் 45 % பேருக்கு உடல் பருமன், சர்க்கரை வியாதி வரும் ஆபத்து உண்டு என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

டோக்கியோ பல்கலைக் கழகம் :
டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர்.

40 நிமிடத்திற்கு மேல் :
இதில் 40 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தூக்கம் சர்க்கரை வியாதி வரவில்லை. ஆனால் 45- 1 மணி நேரத்திற்கும் தூங்கியவர்கள் பெரும்பாலோனோருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்க்கரைவியாதி பல நோய்க்கு அஸ்திவாரம் :
சர்க்கரை வியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கில் என கூறலாம். கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும்.

மதிய தூக்கமும் காரணம் :
இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத் சட்டார் கூறுகிறார்.

மதிய தூக்கமும் காரணம் :
இந்த ஆய்வின் இறுதியில் அதிக நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி கட்டுரை பியர் ரிவியூ மருத்துவ இதழில் வெளிவர இருக்கிறது.