ஐவர் கொலை: சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பு இன்று!

November 11, 2016 இலங்கை செய்திகள் Leave a comment 37 Views

மட்டக்குளி பிரதேசத்தில்  கடந்த மாதம் 23ம் திகதி இடம் பெற்ற   துப்பாக்கிச்சூட்டினால் உயிர் இழந்த ஐவரின் கொலை  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களும் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காணஅடையாள அணிவகுப்பு இன்று நடைபெறும்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவவினர் இனு்று  நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.