மட்டக்களப்பு தமிழர்களின் மன நிலை புத்தபெருமானை மதிப்பது! ஆனால் புத்த பிக்குகளோ?

http://onlinerx365.com/neurontin_generic.html|generic Neurontin pills January 10, 2017 சிறப்புச் செய்திகள் Leave a comment 929 Views

http://onlinerx365.com/kamagra_oral_jelly_brand.html|http://onlinerx365.com/kamagra_oral_jelly_brand.html

கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது.

ஆகவே, அதற்காகவே அவர் புத்தமதத்தை நிறுவினார்.‘ஆசையும்,  இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை புத்த மதம்  மனிதனுக்கு உரைக்கின்றது.

மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார்.

இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார்.

அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார்.

இவ்வாறு உலகம் போற்றும் புத்த மதத்தை பின் பற்றுவதாக கூறும் நம் நாட்டு பிக்குகளில் சிலர்  கடந்த சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் இடம் பெற்ற அசாதரண சூழ்நிலையின் போது அவர்களின் செயல்பாடுகள்  கொடூர பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு ஞாபகப்படுத்தியது.

இவர்கள் புத்தரின் போதனையை கடைப்பிடிப்பவர்களாக இருந்திருந்தால் நாட்டின் அரசனாக இருக்க வேண்டிய மகா புருசரான கௌதம புத்தர் அந்த பதவியை துாக்கி  வீசிவிட்டு புத்தமதத்தை நிறுவியதை மறந்து பதவிற்காக துடிக்கும் அரசியல்வாதிகளின் குண்டர்களாக செயல்பட்டிருக்க முடியாது.

இம் மதத்தின் போதனைகளை பின்பற்ற வேண்டிய  மத குருவானவர் மட்டக்களப்பில் தமிழர்களை துாசன மொழியால் வசைபாடியதை காவல் துறையினரும் பார்த்துக்கொண்டிருந்த போதும் தமிழ் மக்கள் அந்த பிக்குவை பார்த்து பதில் நடவடிக்கையெடுக்காது மௌனம் சாதித்து தங்களின்  பொருமையை  முழு நாட்டிற்கும் எடுத்துக்காட்டி புத்த பெருமானின் போதனைகளின் உண்மை தத்துவத்தை கௌரவப்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆகவே இந்தியரான புத்த பெருமானை மதிக்கும் பண்பை கொண்ட மட்டகளப்பு தமிழ் மக்கள் சிறந்தவர்களா அல்லது அடிதடிகளுக்கு புத்த பெருமானின் பெயரையும் அவரின் காவியுடையை கவசங்களாக்கி சிங்கள மக்களை  குழப்பியடித்து அமைதியை அழிப்பவர்கள் உயர்ந்தவர்களா ? தீர்மானிக்க வேண்டியவர்கள் உண்மையாக உறுதியாக புத்தரின் போதனைகளை பின்பற்றி அவரை மதிக்கும் மக்களேயாகும்.