மட்டக்களப்பில் ஐயப்ப மண்டலப் பெருவிழா நிகழ்வு!

December 18, 2016 எம்மவர் நிகழ்வுகள் Leave a comment 127 Views

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழு நடாத்தும் மண்டலப் பெருவிழா சனிக்கிழமை மாமாங்கம் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கணபதி ஹோமம், அபிஸேகப் பூசை இடம்பெற்று பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட ஐயப்ப சுவாமிமார்களினால் பெரியளவிலான பஜனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் பூசை நிகழ்வுகளும் இடம்பெறும்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட குருசுவாமிமார்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மண்டலப் பெருவிழா குருசுவாமி வ.நவநீதன் குருசுவாமி தலைமையில் நடைபெற்ற மண்டலப் பெருவிழாவில் பூசைகள் யாவும் நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ.எஸ்.உதயகுமாரக் குருக்களினால் நடைபெற்றது.

அத்தோடு திருகோணமலை மாமலை வாசன் சேவா சங்கத்தின் 4வது வருட மலர் பூஜை பாடல் இருவெட்டு அதன்குருவாமி எஸ்.விஜயனினால் குருசுவாமிமார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இப்பூசை நிகழ்வில் ஐநூறுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் மற்றும் சுவாமிமார்கள் கலந்து கொண்டு வேண்டுதலை வேண்டிக் கொண்டனர்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18