மக்களுக்கு இது குறித்து வெளிப்படுத்துங்கள் – நாலக்க கொடஹேவா

தேசப்பற்றுள்ள இயக்கங்களுக்கான சங்கமானது பிணை முறி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கையினை மக்கள் அறிந்துக்கொள்வதற்காக ஊடகங்களுக்கு வெளியிடுமாறு கோரிக்கையை முன் வைத்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் உறுப்பினர் நாலக்க கொடஹேவா ஜனாதிபதிக்கு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.