பொங்களுக்குச் சுவையூட்டும் சக்கரைப் பொங்கல்….

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்
பொடித்த வெல்லம் – கால் கப்
பால் – ஒரு லிட்டர்
பயத்தம்பருப்பு – கால் கப்
நெய் – கால் கப்
முந்திரி – 10
திராட்சை – 25 கிராம்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை:
அரிசி, பருப்பை சுத்தம் செய்து பாலுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும் (அல்லது பால் நன்கு பொங்கி வரும்போது, சுத்தம் செய்த அரிசி, பருப்பை சேர்த்து குழைய வேக வைக்கலாம்). நன்கு வெந்து வரும்போது பொடித்த வெல்லத்தைப் போட்டு கலக்கவும். வெல்லம் கரைந்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனதும், நெய்விட்டு அடிபிடிக்காது கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்விட்டு வறுத்து, சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும். இதில் ஏலக்காய்த்தூள் போட்டு கலக்கவும். விருப்பப்பட்டால், சிறிதளவு பச்சைக்கற்பூர பொடி சேர்க்கலாம்.