பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய விஜய்சேதுபதி!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ படத்திற்கு போட்டியாக சுமார் பத்து திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாக கடந்த மாதம் கூறப்பட்டது.

ஆனால் பொங்கல் நெருங்க நெருங்க ஒவ்வொரு படமாக பின்வாங்கி கடந்த வார நிலைமைப்படி ‘பைரவா’ உள்பட மூன்றே படங்கள் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படமும் பொங்கல் ரேசில் இருந்து வெளியேறியுள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதி கூறியபோது, ‘ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘புரியாத புதிர்’ படத்தை வெளீயிட முடியாததற்கு மிகவும் வருந்துவதாகவும், ஆனால் கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் மட்டுமே ‘பைரவா’வுடன் வருவதால் கிட்டத்தட்ட ‘பைரவா’ சோலோ ரிலீஸ் ஆக வெளியாகிறது.

இதனால் தமிழகத்தில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.