பைரவா திரைப்படத்திற்கு வந்த புது சோதனை!

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் தமிழகம் உள்பட உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 12 முதல் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கிட்டத்தட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் முன்பதிவுகள் முடிந்துவிட்டன.

தமிழகத்தை பொருத்தவரை ‘பைரவா’ படத்தின் ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் கோட்டை என கூறப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிலைமை சாதகமாக இல்லை.

கேரளாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்த்கர்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 12-ம் திகதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் கலந்து கொள்ளாத சுமார் 70 திரையரங்குகளில் மட்டுமே ‘பைரவா’ கேரளாவில் வெளியாகவுள்ளது.

இருப்பினும் இந்த படம் கேரளாவில் ரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.