பைரவா படத்தின் இந்த பாடல் வரிக்கு அர்த்தம் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க கோடானுகோடி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வரல்லாம் வரல்லாம் வா பைரவா’ பாடலின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பாடலை எழுதி பாடியுள்ள அருண்காமராஜ் இந்த பாடலின் வரிகளை எதை நினைத்து எழுதியுள்ளார் என்பது குறித்த தகவல்தான் இது.

பொதுவாக ஒரு கார் ரிவர்ஸில் போக வேண்டும் என்றால் டிரைவருக்கு வெளியே இருந்து ஒருவர் ‘வரல்லாம் வரல்லாம் வா’ என்று வழிகாட்டுவார், அதைபோல விஜய் எடுக்கும் முடிவுக்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் வழிகாட்டுதலாகவும், பின்தொடர்பவர்களாகவும் இருப்பார்கள் என்ற கருத்தில் அருண்காமராஜ் இந்த வரிகளை எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகரையும் தாண்டி அடுத்த நிலைக்கு விஜய் செல்வதற்கு இதுதான் சரியான காலம்.

விஜய் அந்த அடுத்த முடிவை எடுக்க ‘வரல்லாம் வரலாம் வா’ என்று கூறுவதாகவும் இந்த பாடலின் வரிகளை எடுத்து கொள்ளலாம்,

மேலும் பாசத்துக்கே தத்துப்பிள்ளை தளபதிடா, நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா ஆகிய வரிகள் விஜய்யின் நிஜ கேரக்டரையே பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.