பைக் பிரியர்களே! அறிமுகமானது சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!

சுசுகி நிறுவனத்தின் புதிய மாடல் பைக்கான இன்ட்ரூடர் 150 தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.98,340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் பாடல் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 154.9சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், முன்பக்க மற்றும் பின்புக்க டிஸ்க் பிரேக்களுடன் க்ரூசர் ஒன்றையும் சுசுகி வழங்கியுள்ளது.

பைக்கின் முன்பக்கத்தில் உள்ள ஹெட்லேம்ப் முக்கோண வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் கவுள் அதிவேகமாக செல்லும் போது வாகனஓட்டியின் முகத்தில் காற்று நேரடியாக வீசுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது