பேஸ்புக் தளத்தில் இரண்டு புதிய அம்சங்கள்.

பேஸ்புக் தளத்தில் இரண்டு புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பேஸ்புக் தளத்தில் இரண்டு புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை விரைவில் துவங்க இருக்கிறது. ரெட் என்வலப் (red envelope) மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியும், பிரேக்கிங் நியூஸ் (breaking news) மக்களுக்கு முக்கிய செய்திகளை அறிவிக்க முடியும் என கூறப்படுகிறது.

இரண்டு புதிய அம்சங்களுக்கான அதிகாரப்பூர்வமாக சோதனை இதுவரை துவங்கப்படாத நிலையில், இதனை நெக்ஸ்ட் வெப் நிறுவன சமூக வலைத்தள இயக்குனர் மேட் நவாரா என்பவர் முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரீகோட் வெளியிட்டுள்ள தகவல்களில் பிரேக்கிங் நியூஸ் அம்சம் வழங்குவதை பேஸ்புக் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த அம்சம் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படவில்லை. மேலும் ரெட் என்விலப் குறித்த கேள்வியை பேஸ்புக் உறுதி செய்யவும் இல்லை, இதனை மறுக்கவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் புதிய அம்சங்களுக்கான சோதனை நடைபெறுவது வாடிக்கையான ஒன்று தான், இது குறித்து தற்சமயம் எவ்வித தகவலும் வழங்க இயலாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் வழங்கப்படாமலே போகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் க்ரூப் பேமென்ட்ஸ் எனும் வசதியை வழங்கியது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குழுவினருக்கும், தனி நபர்களுக்கும் பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் உடனடி செய்திகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.