பேராதனை பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில் 9 மாணவர்கள் விளக்கமறியலில்…!!!

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் இருவர் மர்மான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, 9 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கடந்த 15 -ம் திகதி குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 25 -ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த, மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.