பேராதனை பல்கலைகழக வெளிவாரி மாணவர்களே இங்கே அழுத்தவும்…

பேரா­தனைப் பல்­கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்­த­வி­ருந்த முதலாம் வருட 100 வீத மட்ட வெளிவாரி புதிய பாடத்­திட்ட பொது கலை­மாணி தொடர் தொலைக் கல்வி பரீட்­சைகள் (Distance and Continuing Education) ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரை இடம்­பெறும் என்று அப்­பல்­கலைக் கழகம் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.

இப் ­ப­ரீட்­சைகள் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி ஆரம்­ப­மா­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் நாட்டில் பர­விய ஒரு­வகை காய்ச்சல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற மண்­ச­ரிவு வெள்ளம் என்­ப­ன­வற்றால் பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தன.

ஏப்ரல் மாதம் இடம்­பெ­ற­வி­ருந்த பொது கலை­மாணி பட்ட பரீட்­சைக்­கான அனைத்து மாண­வர்­களும் ஒகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள இப் ­ப­ரீட்­சைக்கு தோற்ற தகு­தி­யா­ன­வர்­க­ளாக கொள்­ளப்­ப­டு­வார்கள் என்று பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் தொடர் தொலைக் கல்வி நிலை­யத்தின் பிரதிப் பதி­வாளர் ஆர்.வி.எஸ். ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, ஏப்ரல் மாதம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த பரீட்­சைக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அனு­மதிப் பத்­தி­ரங்கள் அனைத்தும் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அனைத்துப் பரீட்­சார்த்­தி­க­ளுக்கும் புதிய அனு­ம­திப்­பத்­திரம் இந்த வாரம் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

தொடர் தொலைக்கல்வி நிலை­யத்தின் மேற்­படி பரீட்­சைகள் நாடெங்­கிலும் வெவ்வேறு பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் நடை­பெ­று­கின்ற அதே­வேளை, மட்­டக்­க­ளப்பில் மட்­டக்­க­ளப்பு அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை, மட்­டக்­க­ளப்பு புனித தெரேசா மகளிர் வித்­தி­யா­லயம், கல்­லடி முகத்­து­வாரம் விபு­லா­நந்தா வித்­தி­யா­லயம், கரு­வேப்­பங்­கேணி விபு­லா­நந்தா கல்­லூரி, தன்­னா­முனை புனித வளனார் வித்தியாலயம் ஆகியவற்றில் நேர அட்டவணைப்படி நடைபெறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.