பெருநாள் தினத்தில் இரத்தினபுரியில் உலமாக்கள் கௌரவிப்பு.

பெருநாள் தினத்தில் இரத்தினபுரியில் உலமாக்கள் கௌரவிப்பு……… இன்று (2) ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இரத்தினபுரி கொடிகமுவ அஸீஸிய்யா மஸ்ஜிதில் ருவன்புர ஹெல்பிங் பௌன்டேன் மூலம் இரத்தினபுரி கொடிகமுவ பகுதியைச் சேர்ந்த இளம் ஆலிம்கள் 6 பேர் கௌரவிக்கப்படுள்ளனர்.

 

இரத்தினபுரி மாவட்ட மக்கள் மத்தியில் சமூக எழுச்சியையும் சகவாழ்வையும் வளர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி ருவன்புர ஹெல்பிங் பௌன்டேனின் முதலாவது சமூகப் பணியாக இன்று உலமாக்கள் கௌரவிக்கப்பட்டனர். மேற்படி அமைப்பின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

இரத்தினபுரி கொடிகமு அய்னுஷ் ஷரபா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக்.தில்ஷாத் முப்தி அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

 

இன்று கௌரவிக்கப்பட்ட அஷ்ஷேக் பர்வின்,அஷ்ஷேக் இனாம்,அஷ்ஷேக் அரபாத்,அஷ்ஷேக் நுஸ்கி,அஷ்ஷேக் முஹம்மத் ,அஷ்ஷேக் யாஸீன் ஆகியோரின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் மற்றும் அவர்களின் இஸ்லாமிய தஃவாப் பணியின் வெற்றிக்காகவும் வருகை தந்திருந்த அனைவரும் துஆச் செய்தனர் .