பெண்களை குறி வைக்கும் நாமல் ராஜபக்ஷ!

பெண்களை இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையில் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க முயற்சித்து வரும் நிலையில், பெண்கள் தொடர்பாக நாமல் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நீண்ட காலமாக பாலியல் தொல்லைகள் தொடர்வதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரச்சனையை மிக நீண்ட காலமாக நாம் அனைவரும் புறக்கணித்து வருவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு ஒரு கூட்டு தேசிய முயற்சி தேவைப்படுகிறது. இது எங்கள் நிகழ்ச்சி நிரலின் முன்னணியில் நாம் வைக்கும் நேரம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாமலின் இந்த கருத்து அரசியல் சார்ந்த நோக்கத்திற்காக வெளியிட்ட கருத்தாகவே பேசப்படுகிறது.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.