பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் பிரபல திரையரங்கு – பேட்மேனின் தாக்கமா..?

கோவையைச் சேர்ந்தவர் அருணாச்சலம் முருகானந்தம். இவர் பெண்களுக்கு நாப்கின்கள் தயாரித்து குறைந்த விலையில் வழங்கி அதன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் விளக்கி வந்தார்.

இந்த நிலையில் இதையே கரு பொருளாக வைத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் பேட்மேன் படம் வெளியானது. இந்தப்படம் வெளியான முதல் நாள் மட்டுமே  ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

 

இந்த நிலையில், சத்யம் திரையரங்கம் தனது திரையரங்கிற்கு வரும் பெண்களுக்கு என்று இலவச நாப்கின்கள் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது. பெங்களூர், சென்னை, கோவை, மும்பை, நெல்லூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், வாரங்கல் ஆகிய இடங்களில் சத்யம் தியேட்டர்கள் உள்ளன. எஸ்கேப், பலாசோ, லி ரெவே சினிமாஸ், எஸ் 2 ஆகியவற்றிலும் வழங்கப்பட்டும் என்று சத்யம் திரையரங்கம் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.