புலிகளின் தங்கம் கிடைக்க இன்னும் 42 அடி மாத்திரமே!

May 4, 2016 சிறப்புச் செய்திகள் Leave a comment 626 Views

விடுதலை புலிகளிடம் அடகு வைத்த பொதுமக்களின் நகைகள் தோண்டி எடுக்கும் அனுமதியை  முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய நிலையில் விடுதலைப்புலிகளினால் கேப்பாபுலவு வீதி, லூர்த்து மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் உள்ள கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகளின் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இக்கிணறு தோண்டப்பட்டு வருகின்றது.

நேற்று,  23 அடி ஆழம் தோண்டப்பட்டும் நகைகள் கிடைக்கவில்லை எனினும் காணி சொந்தக்காரரின் கூற்றுப்படி இக்கிணறு 65 அடி ஆழத்தை கொண்டது.

ஆகையால் மீண்டும் இன்று கிணற்றை தோன்றும் வேலைகள் இன்று ஆரம்பிக்கப்படவிருக்கின்றது

இந்த நடவடிக்கையில்  பொலிசாரும், இணைந்து செயல்ப்பட்டுக் கொண்டு இருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.