புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்றவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தினுடாக(ETF) விசேட புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் பிள்ளைகளுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் கோரியுள்ளார். பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றாரும் இதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.