புத்தகம் எழுதும் அளவு அறிவில்லை தனக்கு – நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தன் எழுதி வெளியிட்ட “ஜனாதிபதி தந்தை” புத்தகம் தான் வாங்கி படித்ததாகவும் அந்த புத்தகத்தில் மைத்திரிபால தொடர்பான எனக்கு தெரிந்த விடயமே இருந்தது எனவும், புத்தகத்திற்காக சிறந்த முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் உங்கள் தந்தையுமாகிய மஹிந்த ராஜபக்ச குறித்து புத்தம் எழுதுவதற்கு எண்ணம் உள்ளதா? என கேட்டப்போது தனக்கு புத்தகம் எழுதும் அளவிற்கு அறிவு இல்லை என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும், சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வாராந்தம் கடிதம் ஒன்று எழுதி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.