புதிய மாற்றத்துடன் வருகிறது, டுவிட்டர் வலைத்தளம் !

டுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 8ம் திகதியே இந்த விடயத்தை, அந்நிறுவனம்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.

பயனாளிகள் டுவிட்டர் பக்கத்தில் தரவுகளை தெளிவாகவும் விரிவாகவும் பதிவிடக்கூடிய வகையில் தனது நடவடிக்கைகளை மேம்படுத்தியதுடன், பதிவிட்ட தரவுகளை மீள் திருத்தம் (edit)  செய்யக்கூடிய வசதிகளை வழங்குமாறு டுவிட்டர் பயனாளிகள் பலர் டுவிட்டர் பங்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.