புகைப்பிடிக்கும் பெண்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

வெளிநாட்டு மோகத்தால் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் விரைவிலேயே முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுகின்றனர்..

புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும், உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் இருக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும். பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவாக சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.