பிரித்தானியா விமானநிலையத்தில் வந்து இறங்கிய இளம் பெண் கைது..!!!!

பிரித்தானியா விமானநிலையத்தில் வந்து இறங்கிய இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
எத்தியோப்பியாவின் தலைநகரான Addis Ababa பகுதியில் இருந்து பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பிரித்தானியாவின் Longford பகுதியில் உள்ள Heathrow விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமானநிலையத்தில் வந்து இறங்கிய அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் உடனடியாக கைது செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், குறித்த பெண் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் அவரை சந்தேகத்தின் பேரில், 2006-ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை பொலிசார் தெற்கு லண்டனில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.