பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீ விபத்து!!!

தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஒரு பெரிய ஸ்டூடியோ என்றால் அது அன்னபூர்ணா ஸ்டூடியோ தான். இது பிரபல நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான இடம். இந்த ஸ்டூடியோவில் நேற்றிரவு தீவிபத்து மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு செட்டில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அருகில் இருந்த இரண்டு திரைப்படங்களுக்காக போடப்பட்டிருந்த செட்டிலும் தீ பரவி இருக்கிறது.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக விபத்து ஏற்பட்ட போது அங்கு யாரும் இல்லை.