பிரபல தமிழ் நடிகர்களின் கல்வித்தகுதி!!!

திரையில் வைத்தியர், என்ஜினியர், பொலிஸ், வழக்கறிஞர் என பன்முகத் தோற்றத்துடன் தோன்றும் உங்கள் அபிமான தமிழ் நட்சத்திரங்கள் என்னப் படித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ராமகிருஷ்ணா மிஷனில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அதன்பின் 1973 ஆம் ஆண்டும் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் நடிப்புக் கற்றுக்கொண்டார்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் பரமக்குடி மற்றும் சென்னை சாந்தோமில் தனது பள்ளிப் படிப்பைப் படித்தார். திரைப்படங்கள் மேல் கொண்ட ஆசையால், தனது இளம் வயதிலேயே அவர் படங்களில் நடிக்க வந்ததால், படிப்பைத் தொடரமுடியாமல் போனது. இருப்பினும், அவர் கலைத் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பல கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விஜய்
விஜய் தனது பள்ளிப் படிப்பை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முடித்தார். பிறகு, சென்னை லொயோலா கல்லூரியில் விஷுவல் கம்னியுகேஷன் படிப்பைப் படித்தார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் விஜய் பாதியிலேயே தனது கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டார்.

அஜித்
அஜித் அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூலில் பள்ளிப் படிப்பைப் பயின்றார். இவர் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

சூர்யா
நடிகர் சூர்யா கோயம்புத்தூரில் உள்ள பத்ம சேசாத்திரி பால பவன் பள்ளியிலும் சென்னையில் உள்ள செயின்ட்.பீட்ஸ் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் லொயோலா கல்லூரியில் பி.காம் முடித்துள்ளார்.

 

விக்ரம்
நடிகர் விக்ரம் சேலம் ஏற்காட்டில் உள்ள மவுண்ட்போர்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். மேலும், லொயோலா கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் எம்பிஏ பட்டப்பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.

கார்த்தி
நடிகர் கார்த்தி கிரிசென்ட் என்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். மேலும், நீயூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமா இயக்கம் பற்றி இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.