பிரதமர்,சபாநாயகருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம்…!!!

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும்போது இந்த மோதல் இடம்பெற்றிருந்தது.

இந்த மோதல் நிலைக்கு சபாநாயகரே காரணம் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருவதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் ஒன்றிணைந்த எதிரணியினர் கலந்துரையாடி வருகின்றனர்.