பிரதமரின் கொலைக்கான சதி முயற்சி முறியடிப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனின் டவுனிங் தெருவில், பிரதமர் தெரசா மே அலுவலகத்தின் கதவை வெடிகுண்டு வைத்து தகர்த்து, உள்ளே நுழைந்து, பிரதமர் தெரசா மேயை கொல்வதற்கு சதி செய்ததாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆகிப் இம்ரான், 21 மற்றும் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள வங்கதேசத்தை பூர்வீகமாக உடைய, மெய்முர் ஜகாரியா ரஹ்மான், 20 ஆகியோர், நவ., 28ல் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது, நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அப்போது போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிரதமர் அலுவலகத்தின் கதவை வெடிகுண்டு வைத்து தகர்த்து, உள்ளே நுழைந்து பிரதமரைக் கொல்லும் நோக்கத்துடன் வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக ரெஹ்மான் கைது செய்யப்பட்டார்.
அவனிடமிருந்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்ரானுடன் சேர்ந்து வேறு சில பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திட்டங்களையும் அவன் வகுத்து வந்தது தெரியவந்தது.
இந்த இருவருக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது பிர்ட்டன் தரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.