பிரஞ்சு ஃப்ரைஸ் பிரியர்களா நீங்கள்..?? இதை கண்டிப்பா படிங்க..!!!

கடந்த 8 வருடங்களாக வறுத்த உருளைக்கிழங்கு பொரியல்கள் பற்றி நடத்தப்பட்டு வந்த ஆய்வில், அதனை நுகர்வதன் மூலம் மக்கள் மரணத்தை நோக்கிப் பயணிக்கின்றனர் என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கி:ளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

என்னதான் பிரஞ்சு ஃப்ரைஸ்களில் கார்போவைதரேற்று போசணை இருந்தாலும் இந்த ஆய்வு முடிவுகள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடித்து உண்ணும் போது ஏற்படும் மொறு மொறு சத்தத்தால் நமக்கு உற்சாகம் ஏற்பட்டாலும் அவை நமது வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.
45 முதல் 79 வயதுக்கு உட்பட்ட 4,400 வட அமெரிக்கர்களிடம் சராசரியாக, ஆண்டுக்கு 14 கிலோ மதிப்பிலான  உருளைக்கிழங்கு பொரியல்கள் மற்றும் வறுக்கப்படாத உருளைக்கிழங்கு பொரியல்கள் கொடுக்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவில் சுமார் 236 மக்கள் இறந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், வறுத்த உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டவர்கள் மட்டும் தான் இறந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், வேகவைத்தோ அல்லது வாட்டி உருளைக்கிழங்கை சாப்பிட்டவர்களுக்கு எந்தவித ஆபத்துமில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வறுக்கப்பட்ட பிரஞ்சு ஃப்ரைஸ்கள் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஒக்ஸிஜனேற்றத்தால் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, சோடியம், என அனைத்தும் இருப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் தருவதில்லை. அத்துடன் உடல் எடையையும் அதிகரிக்கின்றது.

இது வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்குகளிடமிருந்து நிறைய வேறுபாடுகளைக் கொண்டது. ஏனெனில், வேகவைக்கப்பட்டவை ஆரோக்கியம் தரும். இந்த பிரஞ்சு ஃப்ரைஸ் மரணத்தை ஏற்படுத்தகூடியது. இந்த மரணம் ஒருவேளை பயன்படுத்தும் எண்ணெயால் கூட இருக்கலாம். வறுக்கப்பட்டவையால் மரணம் ஏற்படுகின்றது என்று தெரிந்துவிட்டது. எனினும், எதனால் என்பதற்கு இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றது.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், சில உணவுகளை அதிக நேரம் வறுத்தால் அவை Acrylamide எனும் ஒரு இரசாயனத்தை வெளியிடுகின்றது.

இது மனிதனுக்கு புற்றுநோயை உண்டாக்குகின்றது. இதற்குத் தான் ஒரு பழமொழி உண்டு,

இந்த வறுத்த உணவுகளை சுட வைத்து சாப்பிட்டால், சுகாதார அபாயங்களைத் தடுக்கலாம் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.