பிச்சை எடுக்கத்தான் இங்கு வந்தீங்களா… நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட மலேசிய பத்திரிக்கை

மலேசியா சென்று கலை நிகழ்ச்சி நடத்திய நடிகர் சங்கத்தை, மலேசிய பத்திரிக்கைகள் கடுமையாக கிண்டலடித்ததாக நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் சங்கம் சார்பில் கட்டப்படும் புதிய கட்டடத்திற்கு நிதி திரட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சியில், ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், மலேசிய நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது.

பிச்சை எடுக்க வருகிறீர்களான்னு அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் அமரும் அரங்கில், 15 ஆயிரம் பேர் மட்டுமே இருந்தார்கள்.

 

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், இயக்குநர் விக்ரமன் ஆகியோரை அழைத்து, டிக்கெட் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியது வேதனை அளிக்கிறது.

 

பாக்யராஜ் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் வருத்தப்பட்டனர். என்னை மூத்த கலைஞர்களைப் போன்று சரிசமமாக அணுக வேண்டும் என்று கூறியதால், நட்சத்திர கலைவிழாவிற்கு அழைக்கவில்லை போலும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.