பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் இலங்கை பெண்கள்!

நூற்றுக்கணக்கான அழகிய  இளம் இலங்கை பெண்களை மாலைதீவுகளில் உள்ள உயத்தர ஹோட்டல்களுக்கு  பாலியல் தொழிலார்களாக அனுப்பும் குழு ஒன்றை போலீசாரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைத்து முடக்கியுள்ளது,

2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 37 மற்றும் 50 வயதான இவர்கள் இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மரியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைதீவுகளில்  சிலகாலம் பாலிய தொழிலாளராக வேலை செய்து அங்கிருந்து தப்பி வந்த  35 வயது தென் இங்கை பெண் ஒருவர் பொலிஸாருக்கு அளித்த இரகசிய வாக்குமூலம் ஒன்றை அடுத்து இந்த குழு சம்பந்தமான செய்திகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளோர், அழகிய இளம் பெண்களை பல்வேறு சமூகவலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில், கடவுசீட்டு காரியாலயத்தில் தெரிவுசெய்கின்றனர்.

அவர்களுக்கு தொழில் தேடி வெளிநாடு செல்ல உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்ட உடன், அவர்களுக்கு மாலைதீவு ஹோட்டல்களில் ” அப்படியான ” தொழிலுக்கு போனால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றும் கூறப்படும், மாதம் ஒன்றுக்கு 180000 ரூபாய், “சம்பளம்”   இந்த பெண்கள் அவர்களின் உடல் அழகு, வயது இளமை தோற்றம் என்ற அடிப்படையிலேயே தெரிவுசெய்ய படுகின்றனர்.

 ஆனால் இவர்கள் மாதத்தில் எத்தனை கஸ்டமர்களை கவனிக்கவேண்டும் என்றோ அவர்கள் எப்படியான “தேவைகளை” உடையவர்கள் என்றோ சொல்லப்படுவதில்லை. பெரும்பாலும் வயதில் கூடிய செல்வந்த  அதிகாரம் உடைய நபர்களையே தாங்கள்  சந்திப்பதற்காகவும்,  எவ்வாறான பாலியல் செயல்பாட்டுக்கும் மறுப்பு கூற முடியாத நிலையில் அடிமைகள் போல் நடத்தப்படுவதாகவும் தப்பி வந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 மாலைதீவில் சலூன்களிலும் ஹோட்டல்களிலும்  வேலைக்கு செய்வது என்ற போர்வையில் இவர்கள் அனுப்பப்படுகிறார்கள். எனினும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்கள் என்ன தொழிலுக்காக அங்கு செல்கிறார்கள் என்று தெளிவாக முன் கூட்டியே சொல்லப்படும் என்று கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

 சிறிய தீவுகளை கொண்ட மாலைதீவில் இருந்து தப்பி வருவது அத்தனை சுலபம் இல்லை. பலநூறு யுவதிகள் அங்கு இவ்வாறு பாலியல் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

இந்த ஆள்கடத்தல் காரர்களுக்கு உதவும் மாலைதீவு பிரஜைகளை கைது செய்ய அந்த நாட்டு பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது.

 ஏற்கனவே ஓமான் நாட்டில் இங்கை பெண்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகி சிலநாட்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.