பாட்டியை கட்டையால் அடித்து கொன்ற பேரன்!… காரணம் என்ன தெரியுமா?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் கருப்பாயி அவருடைய தாய் ஒச்சம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த கருப்பாயின் மகன் ராஜா மனைவி மீனாட்சியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

பின்னர் பாட்டி ஒச்சம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர ஒச்சம்மாள் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மகள் கருப்பாயியுடன் உடனடியாக ஜெயமங்கலம் காவல் நிலையம் சென்று பேரன் ராஜாவின் கொலை மிரட்டல் குறித்து ஒச்சம்மாள் புகார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வீட்டுக்கு இருவரும் வருவதை பார்த்த பேரன் ராஜா உருட்டுகட்டையை கொண்டு தாக்க முயன்றுள்ளார். இதனை கண்ட கருப்பாயி அங்கிருந்து தப்பிவிட பாட்டி ஒச்சம்மாளை பேரன் ராஜா கண்மூடித்தனமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு மறைந்திருந்த கொலையாளி ராஜாவையும் பொலிசார் கைது செய்தனர்.