பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூரன்…!!!

கடந்த டிசம்பர் மாதத்தில் 10 வயது மாணவனுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுத்தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவரை நேற்ற தினம் கலென்பிந்துவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலென்பிந்துவெவ கொக்காவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரொருவரே குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த மாணவன் தொடர்பில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.