பாடசாலை பேருந்து மீது மோதிய கனரக வாகன விபத்தில் 16 வயது மாணவி பலி!

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கில் உள்ள Morbihan பகுதியில் நேற்று காலை 7.15 மணியளவில் பாடசாலை பேருந்து மீது கனரக ட்ரக் வாகனம் மோதியதில் 16 வயதான மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீரென பிரேக் தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் உள்ளிருந்த அனைத்து மாணவ, மாணவிகளையும் கீழே இறக்கிவிட்டுள்ளார்.

எல்லோரும் அங்கிருந்து கிளம்பி சென்ற நிலையில் 16 வயதான மாணவி மட்டும் தன் பெற்றோர் வருகைக்காக பேருந்து அருகிலேயே ஓட்டுனருடன் காத்திருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த கனரக ட்ரக் வாகனம் பேருந்து மீது வேகமாக இடித்த நிலையில் பேருந்து 20 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.