பாடசாலைகளுக்கு பாடப்புத்தகத்தை வழங்கும் தேசிய வைபவம் நாளை ஆரம்பம்…!!!

புதிய பாடசாலை கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் நூல் வெளியிட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாளிகா வெளிவத்த குறிப்பிட்டுள்ளார்.

தரம் மூன்று, ஒன்பது ஆகிய தரத்திற்கான பாட புத்தகங்கள் இம்முறை புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் கல்வி அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.