பழமை வாய்ந்த அழகிய இராமலிங்க விலாசம்!

December 2, 2016 சுற்றுலாத்தலம் Leave a comment 112 Views

இராமநாதபுரம் மாவட்டத்தை ஆண்ட சேதுபதிகள் வாழ்ந்த அரண்மனையான இராமலிங்க விலாசம் இன்னமும் பழைமையும் பிரம்மாண்டமுமாக எழுந்து நிற்கிறது.

Image result for இராமலிங்க விலாசம்

இந்த பகுதியில் கி.பி 12 ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் சேதுபதிகள் ஆட்சி வந்துள்ளது. அதுவும் சேதுபதி அரசினை நிறுவிய பெருமைக்குரியவர் உடையன் சடைக்கன் சேதுபதி. இவர் இராமநாதபுரத்திற்கு மேற்கே அமைந்துள்ள போகளூர் என்ற ஊரினை தலைநகரமாக கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளார்.

பாண்டியர்-சோழர் அவர்களுக்கு பிறகு சேதுபதிகள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் கி.பி 1795 வரை தன்னாட்சி மன்னர்களாக இருந்துள்ளனர். அதன்பின் ஆங்கிலேயர் பொறுப்பில் இந்த சமஸ்தானம் வந்தது. தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்து வளர்த்த பெருமை கொண்டது ராமநாதபுரம் சமஸ்தானம்.

ஆடல், பாடல் கலைஞர்களையும் அழைத்து பரிசு கொடுத்து கலையை ஆதரித்துவந்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக இந்த அரண்மனையின் புராதன பொருட்கள், ஓவியங்கள் விளங்குகின்றன. சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய பெருமை சேதுபதிக்கு உண்டு. அமெரிக்காவிலிருந்து திரும்பிய விவேகானந்தரை மீண்டும் அழைத்து இராமலிங்க விலாசத்திற்கு அழைத்து சிறப்பு செய்தவர்களும் சேதுபதிதான்.

Image result for Ramalinga Vilasam Museum

Image result for Ramalinga Vilasam Museum

Image result for Ramalinga Vilasam Museum

இராமநாதபுரத்திற்கே பெருமை தேடும் வகையில், 2 மைல் அளவுக்கு இருந்த கோட்டையை கி.பி.1803 ல் ஆங்கிலேய ஆட்சியின் ஆணைப்படி இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இன்று இராமநாதபுரத்தில் கோட்டை இருந்ததுக்கு அடையாளமாக மூலக்கொத்தளம் ஒன்றுதான் உள்ளது.

இதில் 9 பீரங்கிகள் வைத்திருந்ததற்கான அமைப்பு உள்ளது. இந்த மூலகொத்தளத்தில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து சேதுபதியை சந்தித்து பேசியதோடு, சேதுபதியின் விருந்தினராக அரண்மனையில் 2 நாட்கள் தங்கி சென்றுள்ளார்இந்த அரண்மனைக்கு இராமலிங்க விலாசம் என பெயர் வரக்காரணம்.

இராமேஸ்வரம் சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியின் காரணமாக,  இவர்கள் ஆளும் இடத்திற்கு இராமலிங்க விலாசம் என பெயர் சூட்டிக்கொண்டனர். 1798- ல் ஆங்கிலேய தளபதி ஜாக்ஸன் என்ற வீரபாண்டிய கட்டபொம்மனை இங்கு சந்தித்து பேசியது வரலாறு.

Image result for Ramalinga Vilasam Museum

அரண்மனையை சுற்றிலும் பல வண்ண ஓவியங்கள் கண்கவரும்வகையில் உள்ளது. சேதுபதிகளின் ஆட்சி காலம் மற்றும் இராமர் வரலாறு இவற்றை சித்தரிக்கும் வகையில் அரண்மனை முழுவதும் அமைந்துள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்தும் முத்துவிஜயரெகுநாத சேதுபதி காலத்தில் வரையப்பட்டது.

இங்குள்ள சுரங்கப் பாதை தென்தமிழகத்தில் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்த சுரங்கப் பாதை மன்னர் குடுmபத்தினர் ஆபத்தான சூழ்நிலையில் அரண்மனையில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இன்றளவும் இந்த சுரங்கபாதை பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Image result for இராமலிங்க விலாசம்

Image result for இராமலிங்க விலாசம்

Image result for இராமலிங்க விலாசம்

Image result for Ramalinga Vilasam Museum

Image result for Ramalinga Vilasam Museum

Image result for Ramalinga Vilasam Museum