பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

கடந்த 19ஆம் திகதி ஒரு வகை வைரஸ் தொற்றுக் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.  பல்கலைக்கழகத்தின்  4 பீடங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் , இன்றைய தினத்திலிருந்து  மீண்டும் கல்வி  செயற்பாடுகள் ஆரம்பமாகும் என பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன   தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள், மாணவர்களுக்கிடையில் ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக இடை நிறுத்தப்பட்டு, இந்நிலையில், இன்றைய தினத்திலிருந்து இடை நிறுத்தப்பட்ட கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.