பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு…!!!

2017-ம், 2018-ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017-ம், 2018-ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 -ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.