பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல், பாடங்களை இனங்காணல் தொடர்பான வழிகாட்டல்கள் இடம்பெறவுள்ளது.
வவுனியா வளாக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் ஆர். ஜெயக்குமார், வவுனியா வளாக விரிவுரையாளர் ரி. கார்த்தீஸ்வரன், இரசாயனவியல் ஆசிரியர் ஏ. எஸ். பரந்தாமன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே இலவச அனுமதியுடன் இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.