பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் மகிழ்ச்சி செய்தி!

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர், பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பல்கலைக்கழகத்திற்கு 2016 – 2017 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய கற்கைநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.