பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு…!!!

2017/ 2018 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்ப படிவங்களை அனுப்பிவைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2-ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஆகும்.

குறித்த விண்ணப்பப் படிவங்கள் இணையத் தளத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.