பறிபோன மைத்திரியின் கோட்டை – கேக் வெட்டி கொண்டாடிய மகிந்த…!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் ஒன்று கூடிய கூட்டு எதிர்க்கட்சியினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

cake

ஒருவருக்கு ஒருவர் கேக் துண்டுகளை ஊட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக  தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின வெற்றிக்காக பங்களிப்பு வழங்கியமைக்கான மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ice

தற்போதைய ஜனாதிபதியின் கோட்டையான பொலன்நறுவையில் நான்கு தொகுதியை வெல்ல உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு மகிந்த ராஜபக்ச விசேட நன்றியை தெரிவித்துள்ளார்.

cele