பரீட்சை நெருங்கி விட்டதெனும் அச்சமா?? மாணவ – மாணவியரே, பெற்றோர்களே! இதோ! உங்களுக்கு….

க.பொ.த சாதாரண தரத் தேர்வு நெருங்­கு­கி­றது. மாணவ – மாண­வி­யரே… பரீட்சை பயம் உங்­களை பாடாய் படுத்­தி­வி­டக்­கூ­டாது அல்­லவா? அதற்கு சில யோச­னை­கள் உண்டு. ‘ஏன் பரீட்சை பயம்  உண்­டா­கு­கி­றது. அந்த பயத்தை போக்க என்ன செய்­வது? இதோ, மனோ­தத்­துவ ரீதியாக சில ஆலோசனைகள்.

 

தட்­டிக்­கொ­டுங்­கள்

“பிள்­ளை­க­ளுக்கு பரீட்சை பயம் ஏற்­பட பெரும்­பா­லும் பெற்­றோர்­களே கார­ண­மாக இருக்­கி­றார்­கள். மதிப்­பெண்­தான் எதிர்­கா­லத்தை நிர்­ணி­யிக்­கி­றது என்­ப­தால் பெற்­றோர் பிள்­ளை­களை அதிக மதிப்­பெண் எடுக்­கு­மாறு நெருக்­கடி தரு­கின்­ற­னர். இத­னாலே பிள்­ளை­க­ளுக்கு பரீட்சை பயம் ஏற்­ப­டு­கி­றது. மற்­றொன்­று–­மொத்த பாடமும் படிக்­க­ணுமே! படித்­தது எல்­லாம் பரீட்சை நேரத்­தில் நினை­வுக்கு வருமா? என்ற அச்­சத்­தா­லும் பயம் பிறக்­கி­றது.  இந்­தப் பயம் விலக வேண்­டு­மா­னால்– ‘ உன்­னால் நல்­ல­ம­திப்­பெண் எடுக்க முடி­யும்! என பிள்­ளை­க­ளைத் தட்­டிக்­கொ­டுத்து உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டும். அப்­போது தானா­கவே படிக்க  ஆரம்­பித்­தது வி­டு­வார்­கள். படிப்­பது எல்­லாம் மன­தில் பதிய  வேண்­டு­மா­னால் அமை­தி­யான சூழ­லும், நல்ல காற்­றோட்­ட­மும் கூடவே போதிய வெளிச்­ச­மும் ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும். அடிக்கடி ‘படி­படி’ என தொந்த­ரவு படுத்­தக்­கூ­டாது. ஏனென்­றால் ஓர­ள­வுக்கு மேல் தொடர்ந்து படித்­தால் மனத்­தில் பதி­யாது. மூளை­யும் ஒத்­து­ழைக்­காது. ஆகவே 45 நிமி­டங்­க­ளுக்கு ஒரு­முறை சற்று ஓய்வு எடுக்க வேண்­டும்.

 

எச்­­ரிக்கை

எவ்­வ­ளவு நேரம் படிக்­கி­றார்­களோ அவ்­வ­ளவு ஓய்­வும், உற்­சா­க­மும் வேண்­டும். அப்­போ­து­தான் படித்­தது எல்­லாம் மூளை­யில் பதி­யும். பிள்­ளை­கள் எப்­போது படிக்க ஆசைப்­ப­டு­கி­றார்­களோ அது­ப­டியே படிக்க விட­வேண்­டும். அதை விட்­டு­விட்டு– “நீ இந்த நேரத்­தில்­தான் படிக்க வேண்டும், இப்­ப­டி­தான் படிக்க வேண்­டும்” என கட்­டா­யப்­ப­டுத்­தி­னால் மன உளைச்­ச­லுக்கு ஆளா­க­நே­ரி­டும். அதோடு அவர்­கள் கட­மைக்­காக படிப்­ப­தோடு ஒரு முகப்­ப­டுத்­தப்­பட்ட மன­நிலை இல்­லாத நிலைக்கு ஆளா­வ­தால் மனத்­தில் படித்­த­தெல்­லாம் படி­யாது. படிப்­ப­தற்­கென்று ஒரு ‘மூடு’ உள்­ளது. பெரும்­பா­லும் பக­லில் பிறந்­த­வர்­க­ளுக்கு பக­லில் படிக்­க­வும், இர­வில் பிறந்­த­வர்­க­ளுக்கு இர­வில் படிக்­க­தான் மூடு வரும். இதை பெற்­றோர்­கள் உணர்ந்து கொள்­ள­ணும். அதற்­கேற்ப அவர்­களை படிக்க விட வேண்­டும். அதி­கா­லை­யில் படித்­தால் மட்­டுமே எளி­தாக மன­தி­யில் பதி­யும் என்ற எண்­ணம் மக்­க­ளி­டத்­தில் புரை­யோ­டிக் கிடக்­கி­றது.மனோ­தத்­துவ ரீதி­யாக அப்­படி ஒன்­றும் இல்லை.

 

நல்­லது

நம் கல்வி முறை அறி­வுக்கு முத­லி­டம் கொடுக்­கா­மல், மனப்­பா­டத்­திற்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றது. ஆண் பிள்­ளை­க­ளுக்கு அவ்­வ­ள­வாக மனப்­பா­டம் செய்­ய­வ­ராது. புதிது புதி­தாக ஏதா­வது செய்­யவே மனம் விரும்­பும். ஆனால்,  பெண் பிள்­ளை­க­ளுக்கு அப்­படி எது­வும் கிடை­யாது என்­ப­தால் அவர்­க­ளால் எளி­தாக மனப்­பா­டம் செய்ய முடி­கி­றது. மேலும், பெண் பிள்­ளை­கள் ஒரே இடத்­தில் அமர்ந்து அதிக நேரம் படிக்க முடி­யும். ஆண் பிள்­ளை­க­ளால் அது ஆகாது. ஒரு மணி நேர­மா­னாலே எழுந்து இங்­கும், அங்­கும் அலைந்­து­தான் படிப்­பார்­கள். அதை தடுக்­கா­தீர்­கள். அது    பிழையில்லை, படித்­ததை திரும்ப திரும்ப அசை போடு­வ­தால் மட்­டுமே அதை மன­தில் ஆழ­மாக பதிய வைக்­க­மு­டி­யும். சில குறி­யீட்­டைக் கொண்டு படித்­தால் பரீட்­சை­யின் போது பத­றா­ம­லும் தானா­கவே அது தேர்­வுத் தாளில் வந்­து­வி­ழும். என்­னால் ஆகா­தது எது­வு­மில்லை என்ற வைராக்­கி­யத்­தோடு இறங்­கி­னால் எதை­யும் எளி­தாக படிக்க முடி­யும். பரீட்சை பய­மும் ஏற்­ப­டாது.

 

திட்­­மி­டுங்­கள்

எல்லா பாடங்­க­ளை­யும் ஒட்டு மொத்­த­மாக படிக்க நினைக்­கா­மல்  பாடங்­க­ளைப் பிரித்து தெளிந்த மன­நி­லை­யோடு கவ­னம் சித­றா­மல்    படி­யுங்­கள். தேர்வு காலம் நெருங்­கி­றது. இனி ஒவ்­வொரு மணித்­து­ளி­யும் பொன் போன்­றது. ஆகை­யால், எல்லா பாடத்­திற்­கும் நேரத்தை பகிர்ந்து– திட்­ட­மிட்டு படி­யுங்­கள்.


ஒளியை தியா­னம் செய்­யுங்­கள் மூளை சுறு­சு­றுப்­பா­கும்

பிள்­ளை­களை படி­ப­டி­யென துளைத்­தெ­டுத்­தால் படிப்பு கசப்­பா­க­தான் தெரி­யும். படிக்க மனசு போகாது. அதுவே சிறிது நேரம் விளை­யா­டவிட்­டால் மனசு லேசா­கும். தன்னை அறி­யா­மலே படிக்க நாட்­டம்       வந்­து­வி­டும். படிக்க செல்­லும் முன் எரிகின்ற ஒளியை 5 நிமி­டம் உற்று நோக்க வேண்­டும். பின்­னர் கண்ணை மூடிக்­கொண்டு கண்ட ஒளியை நெற்­றி­யில் கற்­ப­னை­யாக  நிலை­நி­றுத்தி காண்­ப­து­போல் எண்ண   வேண்­டும். இவ்­வாறு 5 நிமி­டம் செய்ய வேண்­டும். பிறகு படிக்க சென்­றால் படித்­த­தெல்­லாம் மூளை­யில் எளி­தாக பதி­வா­கி­வி­டும். தொடர்ந்து    படிக்­கக்­கூ­டாது. படித்­தா­லும் மூளைக்கு ஏறாது. 20 நிமி­டம் படித்­து­விட்டு 15 நிமி­டம் ஏதா­வது சின்­ன­தாக விளை­யாட வேண்­டும். படிக்­கும்­போது     இவ்­வாறு தொடர்ந்து கடை­பி­டித்து வந்­தால் படித்­தெல்­லாம் மூளை­யில் விரை­வாக பதி­வதோடு அது மூளை­யில் நீண்ட நாட்­கள் இருக்­கும்.       அவ்­வ­ளவு எளி­தாக நினைவில் இருந்து போகாது. இவ்­வாறு செய்­தால் ஞாபக சக்தி பெரு­கும்.

 

உணவு முறை

பரீட்­சைக்கு படிக்­கும்­போது உட­லில் ஆரோக்­கி­ய­ம் இருந்­தால்­தான் தொடர்ந்து ஆர்­வ­மாக படிக்க முடி­யும். தேர்வு நேரத்­தில் என்­னென்ன உண­வு­களை உண்ண வேண்­டும். என உண­வி­யல்    நிபு­ணர் பத்­மப்­ரியா சொல்­கி­றார். “பரீட்சை நேரத்­தில் மலச்­சி­கல், சிறு­நீர் தடங்­கல்  ஏற்­ப­டா­மல் பார்த்­துக்­கொள்­வது மிக­வும் அவ­சி­யம். நன்கு செரி­மா­ன­மா­கக்­கூ­டிய உணவு வகைளை            உட்­கொள்ள வேண்­டும்.

ஆவி­யில் வேக­வைத்த உண­வு­கள் நல்­லது. தினந்­தோ­றும் கீரை, இரண்டு, மூன்று வகை காய்­க­றி­களை சேர்த்­துக்­கொள்ள வேண்­டும். பழங்­கள் உண்­ண­லாம். ஆரஞ்சு, பப்­பாளி, ஆப்­பிள்,  பழச்­சாறு பருக்­க­லாம். உணவை மூன்று, நான்கு மணி நேரத்­திற்கு ஒரு தடவை மித­மாக சாப்­பிட வேண்­டும். அப்­போ­து­தான் தொடர்ந்து படிக்க முடி­யும். ஒரேதாக உணவு உட்கொண்டால் மந்­த­மாகி சரி­யாக படிக்க முடி­யா­மல் போய்வி­டும். டீ, காப்­பிக்கு பதி­லாகபால், மோர் குடிக்­க­லாம். இறைச்சி, ஜங்­புட், பாஸ்­புட், செயற்கை குளிர் பானங்­களை தவிர்க்க வேண்­டும்” என்­கி­றார்.