பரிசிற்கு ஆசைப்பட்டு 7 இலட்சத்தை இழந்த கொழும்பு மாணவி!..

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவர்  பேஸ்புக் நட்பால் பல இலட்சம் ரூபாவினை இழந்துள்ளார்.

அவரிடம் 7 இலட்சத்து 75 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த மாணவியுடன் பேஸ்புக் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி பாரியளவு பரிசு பெற்றுக் கொள்ள முடியும் என மோசடியாளர் குறிப்பிட்டுள்ளார். அதனை நம்பி ஏமாந்த பெண் குறித்த மோசடியாளரின் வங்கிக் கணக்கில் 7 இலட்சத்து 75 ரூபாய் பணத்தை வைப்பிட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி பரிசு கிடைக்கும் என தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்ட மாதிரி பரிசு வந்து சேராமையினால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதனை மாணவி அறிந்துள்ளார்.

இந்த மோசடியில் சிக்கிய மாணவி கும்புருப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பெரிய மோசடியாகவே இது கருப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.