பராக் ஒபாமாவிற்கு வேலை வாய்ப்பு வழங்க காத்திருக்கும் நிறுவனம்!

January 12, 2017 உலக செய்திகள் Leave a comment 83 Views

‘ஒபாமாவுக்கு வேலை கொடுக்க தயார்’ என அமெரிக்க இசை நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமா எதிர்வரும் 20 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் பதவி விலகும் அதிபர் ஒபாமாவுக்கு வேலை கொடுக்க அமெரிக்காவின் ‘ஸ்பாடிபை’ என்ற இசை நிறுவனம் தயாராகவுள்ளது.

‘அதிபருக்கு வேலை வாய்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், இந்த வேலைக்கு ‘நாட்டின் மிக உயரிய பணியில் இருந்த 8 ஆண்டு அனுபவம் தேவை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா, தான் வெள்ளை மாளிகையின் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ‘ஸ்பாடிபை’ நிறுவனம் தனக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக நகைச் சுவையுடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.