பயிற்சி போட்டியில் இந்தியா தோல்வி!

இந்தியா ஏ – இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் மும்பையில் நடந்தது. கேப்டனாக தோனியின் கடைசி ஆட்டம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் தோனி, யுவராஜ் அதிரடியால் இந்தியா அணி 50 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 92 ரன்கள் எடுத்தார். ஜாசன் ராய் 63 ரன்கள் எடுத்தார்.