பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்…!

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 6:48 திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வனிமோ நகரிலிருந்து சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.