பணத்தை விட மகிழ்ச்சி தரும் 2 விஷயங்கள் இது தான்!

மனிதர்களுக்கு வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிப்பது எது என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அந்த பட்டியலில் தற்போது மனிதர்கள் அதிகளவில் தேடி ஓடும் பணம் ‘டாப்-5’ல் கூட இடம் பிடிக்கவில்லை.

 

இந்த ஆய்வில் சுமார் 8,250 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பது எது என கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதில் பங்கேற்றவர்களுக்கு பொருளாதாரம், வேலை, தூக்கம், உறவுகள், நெருங்கிய நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் பற்றிய 60 கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதில் பெரும்பாலானோர் தூக்கம் மற்றும் செக்ஸ் தான் தங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான பணம், மகிழ்ச்சி அளிக்கும் பட்டியலில் ‘டாப்-5’ல் கூட இடம் பெறவில்லை.

 

தூக்கம் மற்றும் செக்ஸ்க்கு பின் வேலை உத்தரவாதம், ஆரோக்கியம், அக்கம் பக்கத்தினருடன் ஜாலியாக பேசுவது என குறிப்பிட்டுள்ளனர்.

 

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக செலவிட, தங்களின் துணையுடன் செக்ஸில் ஈடுபடுவதுதான் என பலர் தெரிவித்திருந்தனர்.