நேர்கோட்டு இயக்கவியல் – அடிப்படை பெளதீக விதிகள்

கதி :
ஓரலகு நேரத்தில் சென்ற தூரம் கதி எனப்படும்.

வேகம் :
ஓரலகு நேரத்தில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சி வேகம் எனப்படும்.
(ஓரலகு நேரத்திலான இடப்பெயர்ச்சி மாற்று வீதம்.)

படத்தில் காட்டப்பட்டதற்கமைய :

 

கதி, வேக அடையாளப்படம்

கதி (V) = பொருள் பயணித்த தூரம்(S) / பயணித்த தூரத்திற்கு எடுத்துக்கொண்ட நேரம் (T2-T1)

T1-T2 = t (பயணத்திற்கான நேரம்)

V=S/t

வேகம் = இடப்பெயர்ச்சியின் கீழ் / இடப்பெயர்ச்சிக்கான நேரம்
V = D/t

சீரானவேகம் : ஒவ்வொரு அலகு நேரத்திலும் வேக மாற்றம் இல்லை எனின் அது சீரான வேகம்/ மாறாவேகம் எனப்படும்.

———————————————–

ஆர்முடுகல் :

ஓரலகு நேரத்தில் ஏற்பட்ட வேகமாற்ற வீதம் ஆர்முடுகல் ஆகும்.

படத்தில் உள்ளபடி :

 

ஆர்முடுகலுக்கான வரைபடம்

ஆர்முடுகல் (a) = வேகமாற்றம் (V1-V0) / இடப்பெயர்ச்சிக்கான நேரம் (T2-T1)
a=V1-V0 / t

அமர்முடுகல் :
ஓரலகு நேரத்தில் ஏற்பட்ட வேக வீழ்ச்சி வீதத்தை அமர்முடுகல் எனலாம். ( ஆர்முடுகலின் பெறுமதி “-” இல் அமைந்தால் அது அமர்முடுகலாகும்.)

சீரான ஆர்முடுகல் :
ஒவ்வொரு அலகு நேரத்திலும் ஏற்பட்ட வேகமாற்றம் மாறாதாயின் அது சீரான ஆர்முடுகல் எனப்படும்.
(வேக வீழ்ச்சி வீதம் மாறாதாயின் அது சீரான அமர்முடுகல் எனப்படும்.)

இயக்கவியல் குறியீடுகளின் விளக்கம் :
u – ஆரம்ப வேகம்
v – இறுதி வேகம்
a – ஆர்முடுகல்
s – இடப்பெயர்ச்சி
t – நேரம்